இருங்கோளர்கள்

கொடும்பாளூர் இருக்குவேளிர்கள் தங்களை மூவர் கோயில் சமஸ்கிரத கல்வெட்டில் “யது வம்சம்” என்றும் “யாதவர்” என்றும் குறிப்பிடுகின்றனர். அங்கு அவர்களின் கன்னட மொழி கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. இவர்கள் “சோழர்களுக்கு” மிக நெருங்கிய உறவினர்கள் ஆவார்கள். கொடும்பாளூர் இருக்குவேளிர்கள் தங்களை “இருக்குவேள்” என்றும் “இளங்கோவேள்” என்றும் “இருங்கோளன்” என்றும் குறிப்பிடுகிறார்கள்.
சோழர்கள் காலத்தில் விருத்தாசலம், திட்டக்குடி, பெண்ணாடம், காட்டுமன்னார் கோயில், விளந்தை, உடையார்பாளையம் போன்ற பகுதிகள் “இருங்கோளப்பாடி” என்று கல்வெட்டில் அழைக்கப்பெற்றது. வெள்ளாற்றின் இருபுறங்களிலும்சோழர்கள் காலத்தில் வேளிர்களான “இருங்கோளர்கள்”ஆட்சிபுரிந்தார்கள். சங்ககாலத்தில் “இருங்கோவேள்” என்னும் வேளிர் மன்னன் “பிடவூரை” தனது தலைநகராக கொண்டு ஆண்டு வந்தார்கள். இவ் வேளிர் மன்னனான “இருங்கோவேளை” சோழ மன்னனான கரிகாலச் சோழன் வென்றிருக்கிறான். இவனது தலைநகரான “பிடவூர்” என்பது இன்றைய காட்டுமன்னார் கோயில் தாலுக்காவில் உள்ள “புடையூர்” ஆகும். இது வெள்ளாற்றின் தெற்கு கரையோரத்தில் உள்ளது. முற்காலச் சோழனான கோசெங்கண்ணான் விளந்தையில் ஆட்சிபுரிந்த வேளிரான “விளந்தை வேளை” போரில் வென்றிருக்கிறான். இன்றைய உடையார்பாளையம் தாலுக்காவில் உள்ள விளந்தையானது, கி.பி.10 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் இருங்கோளப்பாடி நாட்டு “விளந்தை கூற்றம்” என்று வழங்கப்பட்டது.
வெள்ளாற்றின் வடக்கு கரையோரத்தில் உள்ள எறும்பூரில் உள்ள முதலாம் பாராந்தகச் சோழன் (கி.பி.935) கல்வெட்டு “இருங்கோளன் குணவன் அபராஜிதன்” என்ற வேளிர் மன்னரை பற்றி குறிப்பிடுகிறது.
காட்டுமன்னார்கோயில் ஸ்ரீமுஷ்ணம் கல்வெட்டு (கி.பி.959), “இருங்கோளர் கோனான நாராயணன் புகளைப்பவர் கண்டன்” என்று குறிப்பிடுகிறது. இவர் சுந்தர சோழனின் கல்வெட்டில் (கி.பி.962) “இருங்கோளர் கோனான புகழ்விப்பிரகண்டன் அவனி மல்லன்” என்று குறிப்பிடப்படுகிறார்கள்.
கி.பி. 986 ஆம் ஆண்டு விருத்தாசலம் கல்வெட்டு வேளிர் அரசனான “இருங்கோளன் நாரணன் பிரித்திவிபதியார்” என்பவரை குறிப்பிடுகிறது. இவர் உத்தமச் சோழனின் மாமனார் ஆவார். இவரது (இருங்கோளர்) மகள் “வானவன் மாதேவியார்” உத்தமச் சோழனின் பட்டத்து அரசியாவர்கள்.
கி.பி. 992 ஆம் ஆண்டு விருத்தாசலம் கல்வெட்டு “இருங்கோளன் பிரித்திவிபதி அமனி மல்லன்” என்ற வேளிர் குல மன்னனை பற்றி குறிப்பிடுகிறது. இம் மன்னன் முதலாம் ராஜ ராஜ சோழனின் ஆட்சி காலத்தில் இருந்திருக்கிறான். இந்த வேளிர் அமனி மல்லனின் பட்டத்தரசி, பொத்தப்பிச் சோழன் சத்தியரையர் மகளான “மலையவ்வை தேவியார்” ஆவார்.
அமனி மல்லனுக்குப் பிறகு அவனுடைய புதல்வன் “இருங்கோளர் கோனான அமனி மல்லன் சுந்தர சோழன்” விருத்தாசலம் கல்வெட்டில் (கி.பி.1014) குறிப்பிடப்படுகிறான். இவ் வேளிர் மன்னனின் பட்டத்தரசி “கன்னரன் மாதேவடிகள்”. இவ்வரசி மிலாட்டுடையார் மகளாவார்.
ராஜாதிராஜ சோழனின் (கி.பி.1050) விருத்தாசலம் கல்வெட்டு, “விசையைபுரக் கூற்றத்து விசையபுரத்துப் பள்ளி அமனி மல்லன்” என்ற வேளிர் அரசனை பற்றி குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டு இவரை “வன்னியர்” என்று குறிப்பிடுகிறது.
திட்டக்குடி வட்டம் பெண்ணாடம், விக்கிரம சோழனின் கல்வெட்டு (கி.பி.1130), “பள்ளி கூத்தன் மதுராந்தகனான இருங்கோள ராமன்” என்ற வேளிர் அரசனைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டு இவரை “வன்னியர்” என்று குறிப்பிடுகிறது.
திட்டக்குடி வட்டம் வசிஷ்டாபுரம் மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு, வன்னியர் சமூகத்தை சேர்ந்த “தேனூர் துண்டராயன் திருச்சிற்றம்பலமுடையார்” என்ற குறுநில மன்னனை பற்றிக் குறிப்பிடுகிறது. இவர் “நாவலூர் இருங்கோளர்” மகளாகிய குலோத்துங்கச் சோழியார் என்பவளை திருமணம் செய்துள்ளார்கள். மூன்றாம் குலோத்துங்க சோழனின், கோயில்பாளையம் கல்வெட்டு, இவரை “துண்டராயன் திருவிராடன் குன்றன்” என்றும் இவருடைய அரசி பெயர் “குலோத்துங்கச் சோழியார்” என்றும் குறிப்பிடுகிறது.
“துண்டநாடு உடையார்கள்” என்ற வன்னிய குறுநில மன்னர்கள் சோழர்கள் காலத்தில் அரியலூர் பகுதியை ஆட்சி செய்திருக்கிறார்கள். இவர்களை பற்றி இருபதுக்கும் மேற்பட்டக் கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன. இவர்கள் “வேளிர்கள்” ஆவார்கள். சோழ மன்னன் வீர ராஜேந்திரனின் (கி.பி.1067) கல்வெட்டில், துண்டநாடு உடையார்கள் குறிப்பிடப்படுகிறார்கள். அவர் “பள்ளி கூத்தன் பக்கனான ஜெயம்கொண்ட சோழ துண்ட நாடாழ்வான்” என்பவராவார்கள்.
இந்த குறுநில மன்னனைப் போலவே, முதலாம் குலோத்துங்கச் சோழனின் (கி.பி.1099) ஆட்சிக் காலத்தில் “துண்டநாடு உடையார் சோழ குல சுந்தரன் கல்யாணபுரம் கொண்டார்” என்ற துண்டநாடு உடையார் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார்கள். இவரை அக் கல்வெட்டு “தேனூர் உடையான்” என்று குறிப்பிடுகிறது. இவர் மகா பராக்கிரம சாலியாக இருந்திருப்பார்என்பது இவர் பெயரான “கல்யாணபுரம் கொண்டார்” என்பதில் இருந்து தெரியவருகிறது. கல்யாணபுரம் என்பது “சாளுக்கிய தேசமாகும்”. இந்த துண்டநாடு உடையார் நிச்சயமாக “கலிங்கத்து போரில்” பங்கேற்றிருக்கிறார் என்பதும் அவர் சாளுக்கிய தேசத்தை வென்றதின் காரணமாக, முதலாம் குலோத்துங்கச் சோழன் அவருக்கு “கல்யாணபுரம் கொண்டார்” என்ற பட்டத்தினை வழங்கியிருப்பார்கள் என்பதும் கல்வெட்டின் மூலம் அறியமுடிகிறது. இத்தகைய “துண்டநாடு உடையார்கள்” கல்வெட்டுகளில் “வாணகோவரையர்” என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். வாணகோவரையர்கள் “பள்ளி” என்றும் “வன்னியன்” என்றும் கல்வெட்டில் அழைக்கப்பெற்றனர். வாணகோவரையர் “க்ஷத்ரியர்கள்”ஆவார்கள். {The Nandi plates of Rastrakuta Govinda III (806 A.D) record the grant by Govinda III, at the request of “Kshatriya Mahabali Banaraja”, named Sriparama, of the village of Kandamangala, to Isvaradasa, head of the Sthana (i.e. Matha) in the temple on the Nandi Hills}.
—– xx —– xx —– xx —–

Advertisements