க்ஷத்ரியர் புகழ்ப்பாடும் கீர்த்திகள்

க்ஷத்ரிய அரசர்களான “காடவராயர்களும்”, “சம்புவராயர்களும்”, “நீலகங்கரையர்களும்” நூற்றுக்கணக்கானசோழர்கள் காலத்துக் கல்வெட்டுகளில் கிழ்கண்ட”கீர்த்திகளால்” குறிப்பிடப்பெற்றனர் :-
“ஆளப்பிறந்தான்”
“அவனி ஆளப்பிறந்தான்”
“புவி ஆளப்பிறந்தான்”
“சகலபுவனச் சக்கரவர்த்தி”
“சகலலோக சக்கரவர்த்தி”
மஹா பராக்கிரமம் பொருந்திய “க்ஷத்ரியர்கள்”என்பவர்கள் “சகல புவனத்தையும் ஆளப்பிறந்த சக்கரவர்த்திகள்” ஆவார்கள் என்பதை மனு தர்மம் நமக்கு மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது.
மேற்குறிப்பிடப்பெற்ற “க்ஷத்ரியர் புகழ்ப்பாடும் கீர்த்திகள்” என்பது நூற்றுக்கணக்கானசோழர்கள் காலத்துக் கல்வெட்டுகளில் வன்னிய மன்னர்களைப் குறிப்பிடுகிறது.

புறமலை நாட்டில் (தற்போதைய அரூர், தருமபுரி மாவட்டம்) தீர்த்தமலை என்ற ஊர் உள்ளது. இங்கு இருக்கும் ஆண்டவனுக்கு கூடல் ஆள்வார் என்று பெயர். இங்கு கற்கடமாராயன் என்ற பட்டம் பெற்ற சிற்றரசன் ஒருவன் பரகேசரி ராசேந்திரன் சோழன் காலத்தில் வாழ்ந்து வந்ததாக கல்வெட்டில் காணலாம் (கி.பி. 658, 69, 72). கூடல் என்பது தற்காலத்து தீர்த்தமலை.
பின் ஆண்ட கோப்பெருஞ்சிங்கன் கால கல்வெட்டுகளிலும் கூடலும், திருமுனைப்பாடியும் கீழாமுர் நாட்டில் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. இக்கூடல் கற்கடமாராயன் நிறுவிய கூடல் அல்ல கோப்பெருஞ்சிங்கன் நிறுவிய புதிய கூடல். விருதாச்சலம்- கூடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி – கூடலூர் என்ற ஊர்களை காணலாம். அவனியாளப் பிறந்தான் வீரசேகரன் காடவராயன் என்பவன் கற்கடமாராயன் கூடலை வென்ற பெருமை உடையவன். கற்கடமகராசன் என்ற குடும்பத்தினரை வென்று கொண்ட இக்கூடல் வெற்றியை பிற்காலத்தில் இவன் புதல்வர்களும் பெரிதும் போற்றி “கூடல் ஆளப்பிறந்தான்” என்ற பட்டப்பெயர் கொண்டனர்.

Advertisements