சமஸ்கிருத கல்வெட்டு குறிப்பிடும் அக்னி குல வன்னியர்

மராட்டிய மாநிலத்தில் (Hottal village, Nanded District) உள்ள கி.பி. 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமஸ்கிருத கல்வெட்டில், அக்னி வம்ச க்ஷத்ரியர்களைப்பற்றிய பல குறிப்புகள் உள்ளன. அகத்திய முனிவரின் அக்னி குண்டத்தில் இருந்து “அக்னி புத்திரர்கள்” தோன்றினார்கள் என்று குறிப்பிடுகிறது. மேலும் அக் கல்வெட்டு கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:-
“Vamso vairi-pratap-anala-kula-meghahvahner vamsam” (Slogam 10 – 11).
(அனல் குலத்தில் இருந்து வன்னியர் வம்சம் உற்பவித்து)
“Praty-agam tasya kshatriya-pumgavasya yasasa trailokyam” (Slogam 21)
(வன்னிய அரசர்களை க்ஷத்ரியர்கள் என்று ஸ்லோகம் 21 மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது)
எனவே மேற்குறிப்பிட்டகல்வெட்டு சான்றின் அடிப்படையில் வன்னியர்கள் “க்ஷத்ரியர்கள்”என்பது முற்றிலும் உண்மையாகிறது.
மேலும் அகத்திய முனிவரைப் பற்றி தமிழ்க்கூறும் நல்லுலகம் மிக நன்றாக அறிந்திருக்கிறது. புறநானூறுப் பாடலில் சங்கத் தமிழ் புலவர் கபிலர் அவர்கள் “வடபால் தவமுனிவனின் அக்னி குண்டத்தில் இருந்து வேளிர்கள் தோன்றினார்கள்” என்று குறிப்பிடுகிறார்கள்.
தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள், வடபால் முனிவன் என்பவர் “சம்பு மாமுனிவன்” என்பவரே ஆவார் என்று சான்றுகளை மேற்கோள் காட்டி குறிப்பிடுகிறார்கள்.
திருமூலரின் திருமந்திரத்தில், “வடபால் முனிவன் என்பவர் அகத்தியன்” என்பதை கீழ்கண்ட பாடல்-338 நமக்கு உணர்த்துகிறது :-
“அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடும்
அங்கி உதயஞ்செய் வடபால் தவமுனி
எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே”
எனவே, வடபால் தவமுனிவன் என்பவர் “சம்புமா முனிவன் என்கிற அகத்தியர்” ஆவார்கள்.
நச்சினார்க்கினியர், “அகத்தியனார்……..துவராபதிப்போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையுங் கொண்டு போந்து காடு கெடுத்து நாடாக்கி” எனத் தொல்காப்பியப் பாயிரயுரையிலும்”மலையமாதவன் நிலங்கடந்த நெருமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைச் குடிப்பிறந்த வேளிர்க்கும்” என அகத்திணையியல் 32 ஆம் நூற்பாவுரையிலும் கூறியுள்ளார்.
எனவே, வன்னியர்கள் “அக்னியில் தோன்றிய ராஜ குல வம்சத்து வேளிர்கள்” ஆவார்கள் என்பது உண்மையாகிறது.

The inscription of Chalukya Somesvara-II (1068-76) is among the earliest and is about the Ashrama of Agastya Rishi on the bank of Vanjara river, he said. The inscription tells us about the rising of Chalukya family and gives geneology of King Dhor, his sons Uttama, Kalichor and Arga, all belonging to the Vanhi Kula, he said.

Archaeologists restore 11th century temples at Hottal

—— xx —– xx —– xx —–

Advertisements