தொண்டைமான் இளந்திரையனின் வம்சத்தவர்கள்

சோழர்கள் காலத்தின் ஆமூர் கல்வெட்டு, வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தைச் சேர்ந்த “காடவராய மன்னர்களை” கிழ் கண்டவாறு குறிப்பிடுகின்றது :-
“திரையன் மோகனனான ஆளப்பிறந்தானான திருநீற்று தொண்டைமான்” (Tiraiyan Mogan (alias) Alappirandan (alias) Tirunirrut Tondaiman). (S.I.I. Vol XII, Appendix – B, No.17).
வன்னிய குல காடவராய மன்னர்களை, சோழர்கள் காலத்துக் கல்வெட்டு “திரையன்” என்றும் “தொண்டைமான்” என்றும் குறிப்பிடுகின்றது. இச் சிறப்பு வாய்ந்த கல்வெட்டின் மூலம் அறியப்படும் கருத்து என்னவென்றால் வன்னிய குல காடவராய மன்னர்கள், சங்ககால மன்னன் “தொண்டைமான் இளந்திரையனின்” வழிமரபினர்கள் என்பதாகும்.
இது உண்மைதான் என்பதை நிருபிக்கும் வகையில் சான்று பகர்வது “பட்டினத்தார்” என்று அழைக்கபெரும் “பட்டினத்தடிகள்” அருளிச் செய்த ஞானம் 45-வது கவியாகும். அது :-
“வேண்டுந்திரவியமும் மேலுயர்ந்த பள்ளியெல்லாம்
ஆண்ட திரைநாடும் அம்பலமும் – மாண்டுபெருங்
காடுரந்தாரேமனமேகண்டாயோ மாயனயன்
தேடரிய ஈசன் செயல்”
“மேலுயர்ந்த பள்ளியெல்லாம் ஆண்ட திரைநாடும்” என்பதால் “பள்ளிகள்” (வன்னியர்கள்) பல நாட்டை ஆண்ட அரசர்கள் எனவும் அவர்கள் அரசாட்சி செய்தது கடலால் சூழப்பட்ட நாடுகள் எனவும் தெரியவருகிறது. கடலால் சூழப்பட்ட திரை நாட்டை ஆண்டவர்கள் “திரையர்கள்” எனப்பட்டனர். அத்தகையோர் உயர்குடி க்ஷத்ரியர்களான “பல்லவ மரபினர்கள்” ஆவர்.
சைவ சமய குரவர்களில் ஒருவரான சுந்தரர் அவர்கள் தனது திருத்தொண்டத் தொகையில், “காடவர் கோன் கழற்சிங்க நாயனாரை” கடல் சூழ்ந்த திரை நாட்டை ஆண்டவர் என்று குறிப்பிடுகிறார்கள். அது :-
“கடல் சூழ்ந்த உலகு எலாம் காக்கின்ற பெருமான் காடவர் கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்” என்பதாகும்.
இத்தகைய பெருமை வாய்ந்த “வன்னிய குல சக்கரவர்த்தியை”, பெரும்புலவர் சேக்கிழார் பெருமானார் அவர்கள் தனது பெரியபுராணத்தில் :-
“படிமிசை நிகழ்ந்த தொல்லைப் பல்லவர் குலத்து வந்தார்” என்றும் “காடவர் குரிசி லாராங் கழற்பெருஞ் சிங்கனார்” என்றும் குறிப்பிடுகிறார்கள்.
இவரது வழிமரபினர்களான காடவராயர்கள், சோழர்கள் காலத்துக் கல்வெட்டுகளில் “காடவ குல சூடாமனி” என்றும் “பல்லவர் குல பாரிஜாதம்” என்றும் “திரையன்” என்றும் “தொண்டைமான்” என்றும் “காஞ்சி பல்லவன்” என்றும் “மல்லை வேந்தன்” என்றும் “மல்லாபுரி வல்லபன்” என்றும் “பள்ளி ஆளப்பிறந்தான்” என்றும் “சியன் சம்பு மன்னவன்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
வாழ்க இத்தகைய புகழ்மிகு “வன்னிய குல தொண்டைமான் இளந்திரையனின்” வம்சத்தவர்கள்.
—– xx —– xx —– xx —

Advertisements