வாணாதிராயர்கள்-2

அது :-
“நெடுவாசல் சிமைக்குக் கறுத்தாவான பாண்டிய
பெருமாளான மாவுலிவாணாதராயர் மக்களில்
திருமெனியழகியரான குலசெகரக் காலிங்கராயரும்
பமையவனப் பெருமாளான சிவலக் காலிங்கிராயரும்
செந்தாமரைக் கண்ணரும் இம் முவருமொம்”
(I.P.S. No.942), (ஆலங்குடி தாலுகா, அம்புக்கோவில்).
எனவே நெடுவாசல் சீமைக்குத் தலைவனான (கறுத்தாவான) மாவலிவாணாதிராயர் “வன்னியர்” என்று முடிவாகிறது. இவ் வன்னியர்கள் தான் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த வாணாதிராயர்கள் என்று தெரியவருகிறது.
மகதேசம், மகதை மண்டலம் என்பது சேலம் மாவட்டத்தின் கீழ்ப்பகுதியையும் பழைய தென்னார்க்காடு மாவட்டத்தின் மேற்பகுதியையும்கொண்டதாகும். சேலம் மாவட்டத்தில் அந்நாட்களில் ஆண்ட அரசர்கள் “வாணகோவரையர்” எனவும் “வாணதிராயர்” எனவும் “மகதேச நயினார்” எனவும் தம்மை அழைத்துக்கொண்டனர். விருத்தாசலம் விருத்தகிரிஸ்வரர் கோயிலில் இருக்கும் பாண்டியர் கால கல்வெட்டு ஒன்று “திருமாலிருஞ்சொலை நின்றானான மழவராயர்” என்று குறிப்பிடுகிறது.
மகதேச நயினார், மழவதரைய வாணராயன் என்பவைகள் “வன்னியர்களை” நேரிடையாக குறிப்பிடும் பெயர்களாகும். இன்றும் அறகளுர், பொன்பரப்பி போன்ற பகுதிகளில் வசிக்கும் வன்னியர்கள் தங்களை “வாணாதிராயர் மரபினர்” என்றே குறிப்பிடுவதாக புலவர் முத்து எத்திராசன் ஐயா அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அவர் நேரிடையாக அப்பகுதிகளுக்குசென்ற பொழுது இக்குறிப்பை பெற்று வந்ததாகத் தெரிவித்தார்கள்.
கவிச்சிங்கம் ராஜரிஷி சு. அர்த்தநாரீச வர்மா ஐயா அவர்கள், கும்பகோணத்தில் வாணதரையர் என்று ஒரு பாளையக்காரர் இருப்பதாகவும் அவ் வாணதரையர் தலைமையில் ஒரு ஹைஸ்கூல் அந்நகரில் இயங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சபாநாயகம் சன்னதியின் ஒரு கல்வெட்டு “புவனேக வீரன்”, “சமர கோலாகலன்” என்னும் விருது பெற்ற “வாணகோவரையனுடையது”. அதில் அவன் “மிழலைக் கூற்றத்து அம்மான் நீலகங்கரையன் உடன் கற்பிக்கையில்” என்று தெரிவிக்கிறான்.இதன் மூலம் நீலகங்கரைய மன்னர்கள் சிலர் வாணகோவரையர்களிடம் உறவுமுறை வைத்திருந்தனர் என்று தெரியவருகிறது.
சோழர் மற்றும் பாண்டியர் காலத்தில் குறுநில மன்னர்களாக சிறப்புற்று விளங்கிய நீலகங்கரைய மன்னர்கள் தங்களை “வன்னிய நாயன்” என்றும் “பள்ளி” என்றும் கல்வெட்டுக்களில் அழைக்கப் பெற்றிருக்கின்றனர். மேலும் பிற்காலச் வன்னியர் செப்பேடுகள் மற்றும் இடங்கை வலங்கை புராணம் நீலகங்கரைய மன்னர்களை “வன்னிய மரபினர்” என்று நிறுவுகிறது.
நீலகங்கரையர் மற்றும் வாணகோவரையர் உறவுமுறைகள் இவர்களை “வன்னிய குல க்ஷத்ரியர்கள்” என்று என்னவேண்டியுள்ளது. இதை உறுதிப்படுத்தும்விதமாக அமைவது, ராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கோவிந்தனின் (கி.பி.806) நந்தி செப்பேடுகள் ஆகும். அச் செப்பேடு வாணாதிராயர்களை “க்ஷத்ரியர்கள்”என்று மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது.
வன்னியர்களுக்குவழங்கப்படும் பல பட்டப் பெயர்களுள் “வாணாதிராயர்” என்பது மிகப் பிரபலமானது ஆகும். பழைய தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள பல ஊர் பெயர்கள் “வாணதிராயர்” பெயர்களை நினைவுகூர்ந்து அமைந்திருக்கின்றது. அந்த ஊர்களில் வன்னிய குல க்ஷத்ரியர்களே “வாணாதிராயர்” என்ற பட்டப் பெயரை தாங்கி பெரும்பான்மையாகவாழ்ந்து வருகின்றனர்.
—– xx —– xx —– xx —–

Advertisements