விழுப்பரையர்

சோழ அரசன் “உத்தமச் சோழனின்” (973 – 985 A.D) பட்டத்தரசியும்,விழுப்பரையரின் மகளுமான “கிழானடிகள்” என்பவள் “வன்னிய குல க்ஷத்ரிய” சமூகத்தைச் சேர்ந்தவள் ஆவாள். இன்றைய “விழுப்புரம் மாவட்டம்” என்பது சோழர்கள் காலத்தில் “விழுப்பரையர்கள்” என்னும் சிற்றரசர்களால் ஆளப்பட்டது. இவர்கள் “விழுப்பாதிராசன்” என்றும் சோழர்கள் காலத்துக் கல்வெட்டில் அழைக்கப்பெற்றனர் :-
“குடிப்பள்ளி குமாரி சேந்தனான ஜயங்கொண்ட சோழ விழுப்பரைய நாடாழ்வான்” (S.I.I. Vol-XVII, No.227), (Adhirajendra Chola, 1068-69 A.D).
“குடிப்பள்ளி சேந்தன் நாகனான ராஜேந்திரசோழ விழுப்பாதிராசன்” (S.I.I. Vol-XVII, No.223), (Kulottunga Chola-I, 1096-97 A.D).
“விழுப்பரையர்” என்ற பெயரானது “போரில் பல விழுப்புண் பெற்ற வீர மரபினர்களுக்கு”வழங்கப்படும் வீரமிகு பட்டமாகும். விழுப்புண் பெற்ற அரையர்கள் “விழுப்பரையர்கள்” எனப்பட்டனர். அத்தகைய “வீர மரபினர்கள்” இன்றும் “விழுப்புரம் மாவட்டத்தில்” நிறைந்து பெருமையோடு வாழ்ந்துவருகிறார்கள்.
—– xx —– xx —– xx —–

Advertisements