காடவர் கோன் கழற்சிங்கன்

வன்னிய குல க்ஷத்ரிய வேந்தரான “காடவர் கோன் கழற்சிங்க நாயனாரை”, சுந்தரர் தனது திருத்தொண்டத்தொகையில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்கள் :-
“கடல் சூழ்ந்த உலகுஎலாம் காக்கின்ற பெருமான்
காடவர் கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்”
பல்லவர் பெருமான் கழற்சிங்க நாயனார் அவர்கள், சைவ நாயன்மார்களுள் ஒருவர் ஆவார்கள். இவர், கடலால் சூழப்பட்ட பல நாடுகளை ஆட்சி செய்தவர் என்பதை சுந்தரமூர்த்தி நாயனார் அவர்கள் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறார்கள்.
எனவே இந்த அடிப்படை சான்றின் மூலம் தெரியவரும் உண்மையானது என்னவென்றால், வன்னிய குல க்ஷத்ரிய வேந்தர்களான பல்லவர்கள், தென் கிழக்கு ஆசிய நாடுகளை ஆட்சி செய்தவர்கள் என்பதும் அங்கே அவர்கள் பல கோயில்களை கட்டியவர்கள் என்பதாகும்.
சோழர்கள் காலத்தில் பெரியபுராணம் எழுதிய புலவர் சேக்கிழார் பெருமானார் அவர்கள், அப் புராணத்தில் காடவர் கோன் கழற்சிங்க நாயனாரை :-
“படிமிசை நிகழ்ந்த தொல்லைப் பல்லவர் குலத்து வந்தார்” என்றும் “காடவர் குரிசி லாராங் கழற்பெருஞ் சிங்க னார்” என்றும் குறிப்பிடுகிறார்கள்.
இத்தகைய பெருமைமிகு பல்லவ வம்சத்தில் இருந்து வந்தவரே, வீர வன்னிய குல க்ஷத்ரிய வேந்தன் “காடவ கோப்பெருஞ்சிங்கபல்லவன்” ஆவார்கள்.
—– xx —– xx —– xx —–

Advertisements