சோழ மாமனும் பல்லவ மச்சானும்

சோழ பெருவேந்தன் மூன்றாம் குலோத்துங்கச் சோழனுக்கு, பல்லவ குல பாரிஜாதன் காடவ கோப்பெருசிங்கன்அவர்கள், “மச்சான்” மற்றும் “மருமகப்பிள்ளை”உறவுமுறை.
பள்ளி குல காடவராய கோப்பெருசிங்கப்பல்லவனுக்கு, சோழ பெருவேந்தன் மூன்றாம் குலோத்துங்கச் சோழன் அவர்கள், “மாமன்” மற்றும் “மாமனார்” உறவுமுறை.
இந்த ஒருசான்றே போதுமானது, சோழர்களும் பல்லவர்களும் “வன்னிய குல க்ஷத்ரியர்கள்” என்பதற்கு.

Advertisements

காடவர் கோன் கழற்சிங்கன்

வன்னிய குல க்ஷத்ரிய வேந்தரான “காடவர் கோன் கழற்சிங்க நாயனாரை”, சுந்தரர் தனது திருத்தொண்டத்தொகையில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்கள் :-
“கடல் சூழ்ந்த உலகுஎலாம் காக்கின்ற பெருமான்
காடவர் கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்”
பல்லவர் பெருமான் கழற்சிங்க நாயனார் அவர்கள், சைவ நாயன்மார்களுள் ஒருவர் ஆவார்கள். இவர், கடலால் சூழப்பட்ட பல நாடுகளை ஆட்சி செய்தவர் என்பதை சுந்தரமூர்த்தி நாயனார் அவர்கள் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறார்கள்.
எனவே இந்த அடிப்படை சான்றின் மூலம் தெரியவரும் உண்மையானது என்னவென்றால், வன்னிய குல க்ஷத்ரிய வேந்தர்களான பல்லவர்கள், தென் கிழக்கு ஆசிய நாடுகளை ஆட்சி செய்தவர்கள் என்பதும் அங்கே அவர்கள் பல கோயில்களை கட்டியவர்கள் என்பதாகும்.
சோழர்கள் காலத்தில் பெரியபுராணம் எழுதிய புலவர் சேக்கிழார் பெருமானார் அவர்கள், அப் புராணத்தில் காடவர் கோன் கழற்சிங்க நாயனாரை :-
“படிமிசை நிகழ்ந்த தொல்லைப் பல்லவர் குலத்து வந்தார்” என்றும் “காடவர் குரிசி லாராங் கழற்பெருஞ் சிங்க னார்” என்றும் குறிப்பிடுகிறார்கள்.
இத்தகைய பெருமைமிகு பல்லவ வம்சத்தில் இருந்து வந்தவரே, வீர வன்னிய குல க்ஷத்ரிய வேந்தன் “காடவ கோப்பெருஞ்சிங்கபல்லவன்” ஆவார்கள்.
—– xx —– xx —– xx —–

காடவன் மாதேவி

முதலாம் குலோத்துங்கச் சோழனின் பட்டத்தரசியான “காடவன் மாதேவி” அவர்கள், பல்லவ வம்சத்தில் தோன்றிய அரசியாவார்கள். பள்ளி குல காடவராய கோப்பெருஞ்சிங்கனின் வம்சத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இவர்களது பெயரினில் ஓர் “சதுர்வேதிமங்கலம்” அமைந்திருந்தது என்பதை சோழர்கள் காலக் கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது:-
“காடவன் மாதேவி ஆன விருதராஜபயங்கர சதுர்வேதிமங்கலம்” (S.I.I Vol-II, No.22, Page – 114)
“விருதராஜா பயங்கரன்” என்பது முதலாம் குலோத்துங்கச் சோழனின் பெயராகும். அவன் “பல விருதுகள் பெற்ற அரசர்களுக்கெல்லாம் பயங்கரமான அச்சத்தை கொடுப்பவன்” என்பதால் “விருதராஜ பயங்கரன்” என்று அழைக்கப்பெற்றான்.
சோழ மன்னர்கள், “வன்னிய குல க்ஷத்ரிய” சமூகத்தைச் சேர்ந்த அரசியார் “காடவன் மாதேவி” பெயரிலும் சதுர்வேதிமங்கலத்தை ஏற்படுத்தி அதை “பிராமணர்களுக்கு” கொடுத்திருக்கிறார்கள் என்பது உண்மையிலே வன்னியர்கள் பெருமையடையவேண்டிய விஷயமாகும்.
வன்னிய மன்னர்களான நிலகங்கரையர்களும், சம்புவராயர்களும் கீழ்கண்ட சதுர்வேதிமங்கலங்களை, பிராமணர்களுக்குஅமைத்து கொடுத்திருக்கிறார்கள் என்பதை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. அவை :-
“பஞ்சநதிவாணச் சதுர்வேதிமங்கலம்”
“ஆதிநாயகச் சதுர்வேதிமங்கலம்”
“சம்புகுலப் பெருமாள் அகரமான இராஜ கம்பீரச் சதுர்வேதிமங்கலம்”
“செய்யாற்று வென்றான் சதுர்வேதிமங்கலம்”,
“ஸ்ரீ மல்லிநாதச் சதுர்வேதிமங்கலம்”,
“வீரகம்பீர சதுர்வேதிமங்கலம்”,
“ஸ்ரீமத் ராஜநாராயணச் சதுர்வேதிமங்கலம்”
“காங்கயநல்லூரானநீலகண்டர் சதுர்வேதிமங்கலம்”
“ஓசூரான காலிங்கராய நல்லூரான காலிங்கராயச் சதுர்வேதிமங்கலம்”
“இந்திரவனமான இராசநாராயணக்கவனமங்கலம்”
சதுர்வேதிமங்கலங்களை க்ஷத்ரியர்களான வன்னியர்கள், பிராமணர்களுக்குஏற்படுத்திக்கொடுத்தது என்பது அவர்களின் மீது வைத்திருந்த மிகப்பெரிய மரியாதையை காட்டுகிறது. இன்றும் பல வன்னியர்கள் பிராமணர்களின் மீது மிகப்பெரிய மரியாதையை வைத்திருக்கிறார்கள் என்பது உண்மையாகும்.
—– xx —– xx —– xx —