சோழ மாமனும் பல்லவ மச்சானும்

சோழ பெருவேந்தன் மூன்றாம் குலோத்துங்கச் சோழனுக்கு, பல்லவ குல பாரிஜாதன் காடவ கோப்பெருசிங்கன்அவர்கள், “மச்சான்” மற்றும் “மருமகப்பிள்ளை”உறவுமுறை.
பள்ளி குல காடவராய கோப்பெருசிங்கப்பல்லவனுக்கு, சோழ பெருவேந்தன் மூன்றாம் குலோத்துங்கச் சோழன் அவர்கள், “மாமன்” மற்றும் “மாமனார்” உறவுமுறை.
இந்த ஒருசான்றே போதுமானது, சோழர்களும் பல்லவர்களும் “வன்னிய குல க்ஷத்ரியர்கள்” என்பதற்கு.

Advertisements

கலிங்கராய உடையார்கள்

கடலங்குடி வன்னிய குல க்ஷத்ரிய அரசர்களான
ஸ்ரீமத் ஆதி கலிங்கராய உடையார்கள். கடலூர் மாவட்டம் ஓமாம்புலியூரை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செலுத்திய வன்னிய குல க்ஷத்ரிய அரசர்களான இவர்கள் தங்களை பார்கவ கோத்திரத்து ஸ்ரீமத் ஆதி கலிங்கராய உடையார்கள் என்று குறிப்பிடுகிறார்கள். இவர்களது சொத்துப்பத்திரங்களில் தங்களை “பிரம்ம வன்னிய க்ஷத்ரிய ஜாதி” என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.
இவர்கள் குறுநில மன்னர்களாகவும்,பாளையக்காரர்களாகவும், ஜமீன்களாகவும் விளங்கியிருக்கின்றனர். ஓமாம்புலியூர், நாகை மாவட்டம் கடலங்குடி, தஞ்சை மாவட்டம் குறிச்சி (அணைக்கரை அருகே உள்ளது) ஆகிய இடங்களில் இவர்களுக்கு அரண்மனைகள் இருக்கின்றன. கொள்ளிடம் ஆற்றின் வடக்குக் கரையில் ஓமாம்புலியூரும்தெற்குக் கரையில் கடலங்குடியும் அமைந்திருக்கின்றன.
கடலூர் மாவட்டம் முட்டத்தில் உள்ள பெரியாண்டவர் கோயில், காட்டுமன்னார் கோயில் அருகே கடம்பூரில் உள்ள சிவன் கோயில், ஓமாம்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் கோயில் (பாடல் பெற்ற தலம்), கடலங்குடி மாரியம்மன் கோயில், சிவன் கோயில் மற்றும் வரதராஜபெருமாள் கோயில் உள்ளிட்ட பல கோயில்களுக்கு இவர்கள் பரம்பரை உரிமையுடையவர்களாக விளங்கிவருகின்றனர்.
கடலங்குடி அரசர் “ஸ்ரீமத் ஆதி கலிங்கராய முத்துகுமாரசாமிஆண்டியப்ப உடையார்” அவர்கள், உடையார் பாளையத்தின் 23-வது அரசரான “ஸ்ரீமத் கச்சி யுவரங்கப்ப காலாட்கள் தோழ உடையார்” அவர்களுக்கு தமது மூன்று மகள்களையும் திருமணம் செய்து கொடுத்தார்கள்.
காடவராய கோப்பெருஞ்சிங்கபல்லவனின் வம்சத்தினர்களானமுகாசா பரூர் கச்சியராய அரசர்கள் மற்றும் ஊற்றங்கால் அரசர்களான பரமேஸ்வர வன்னிய நயினார் ஆகிய வன்னிய அரச மரபினர்களுடன் கடலங்குடி அரசர்கள் திருமண உறவை கொண்டுள்ளனர்.
கடலங்குடி அரசர்கள் “ஆதி கலிங்கராயர்” என்று அழைக்கப்படுவதால், இவர்களது முன்னோர்கள் கலிங்கப்போரில் பங்கேற்றிருப்பார்கள் என்று கருதப்படுகிறது.
—– xx —– xx —– xx —–

காடவர் கோன் கழற்சிங்கன்

வன்னிய குல க்ஷத்ரிய வேந்தரான “காடவர் கோன் கழற்சிங்க நாயனாரை”, சுந்தரர் தனது திருத்தொண்டத்தொகையில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்கள் :-
“கடல் சூழ்ந்த உலகுஎலாம் காக்கின்ற பெருமான்
காடவர் கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்”
பல்லவர் பெருமான் கழற்சிங்க நாயனார் அவர்கள், சைவ நாயன்மார்களுள் ஒருவர் ஆவார்கள். இவர், கடலால் சூழப்பட்ட பல நாடுகளை ஆட்சி செய்தவர் என்பதை சுந்தரமூர்த்தி நாயனார் அவர்கள் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறார்கள்.
எனவே இந்த அடிப்படை சான்றின் மூலம் தெரியவரும் உண்மையானது என்னவென்றால், வன்னிய குல க்ஷத்ரிய வேந்தர்களான பல்லவர்கள், தென் கிழக்கு ஆசிய நாடுகளை ஆட்சி செய்தவர்கள் என்பதும் அங்கே அவர்கள் பல கோயில்களை கட்டியவர்கள் என்பதாகும்.
சோழர்கள் காலத்தில் பெரியபுராணம் எழுதிய புலவர் சேக்கிழார் பெருமானார் அவர்கள், அப் புராணத்தில் காடவர் கோன் கழற்சிங்க நாயனாரை :-
“படிமிசை நிகழ்ந்த தொல்லைப் பல்லவர் குலத்து வந்தார்” என்றும் “காடவர் குரிசி லாராங் கழற்பெருஞ் சிங்க னார்” என்றும் குறிப்பிடுகிறார்கள்.
இத்தகைய பெருமைமிகு பல்லவ வம்சத்தில் இருந்து வந்தவரே, வீர வன்னிய குல க்ஷத்ரிய வேந்தன் “காடவ கோப்பெருஞ்சிங்கபல்லவன்” ஆவார்கள்.
—– xx —– xx —– xx —–

காடவன் மாதேவி

முதலாம் குலோத்துங்கச் சோழனின் பட்டத்தரசியான “காடவன் மாதேவி” அவர்கள், பல்லவ வம்சத்தில் தோன்றிய அரசியாவார்கள். பள்ளி குல காடவராய கோப்பெருஞ்சிங்கனின் வம்சத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இவர்களது பெயரினில் ஓர் “சதுர்வேதிமங்கலம்” அமைந்திருந்தது என்பதை சோழர்கள் காலக் கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது:-
“காடவன் மாதேவி ஆன விருதராஜபயங்கர சதுர்வேதிமங்கலம்” (S.I.I Vol-II, No.22, Page – 114)
“விருதராஜா பயங்கரன்” என்பது முதலாம் குலோத்துங்கச் சோழனின் பெயராகும். அவன் “பல விருதுகள் பெற்ற அரசர்களுக்கெல்லாம் பயங்கரமான அச்சத்தை கொடுப்பவன்” என்பதால் “விருதராஜ பயங்கரன்” என்று அழைக்கப்பெற்றான்.
சோழ மன்னர்கள், “வன்னிய குல க்ஷத்ரிய” சமூகத்தைச் சேர்ந்த அரசியார் “காடவன் மாதேவி” பெயரிலும் சதுர்வேதிமங்கலத்தை ஏற்படுத்தி அதை “பிராமணர்களுக்கு” கொடுத்திருக்கிறார்கள் என்பது உண்மையிலே வன்னியர்கள் பெருமையடையவேண்டிய விஷயமாகும்.
வன்னிய மன்னர்களான நிலகங்கரையர்களும், சம்புவராயர்களும் கீழ்கண்ட சதுர்வேதிமங்கலங்களை, பிராமணர்களுக்குஅமைத்து கொடுத்திருக்கிறார்கள் என்பதை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. அவை :-
“பஞ்சநதிவாணச் சதுர்வேதிமங்கலம்”
“ஆதிநாயகச் சதுர்வேதிமங்கலம்”
“சம்புகுலப் பெருமாள் அகரமான இராஜ கம்பீரச் சதுர்வேதிமங்கலம்”
“செய்யாற்று வென்றான் சதுர்வேதிமங்கலம்”,
“ஸ்ரீ மல்லிநாதச் சதுர்வேதிமங்கலம்”,
“வீரகம்பீர சதுர்வேதிமங்கலம்”,
“ஸ்ரீமத் ராஜநாராயணச் சதுர்வேதிமங்கலம்”
“காங்கயநல்லூரானநீலகண்டர் சதுர்வேதிமங்கலம்”
“ஓசூரான காலிங்கராய நல்லூரான காலிங்கராயச் சதுர்வேதிமங்கலம்”
“இந்திரவனமான இராசநாராயணக்கவனமங்கலம்”
சதுர்வேதிமங்கலங்களை க்ஷத்ரியர்களான வன்னியர்கள், பிராமணர்களுக்குஏற்படுத்திக்கொடுத்தது என்பது அவர்களின் மீது வைத்திருந்த மிகப்பெரிய மரியாதையை காட்டுகிறது. இன்றும் பல வன்னியர்கள் பிராமணர்களின் மீது மிகப்பெரிய மரியாதையை வைத்திருக்கிறார்கள் என்பது உண்மையாகும்.
—– xx —– xx —– xx —

விழுப்பரையர்

சோழ அரசன் “உத்தமச் சோழனின்” (973 – 985 A.D) பட்டத்தரசியும்,விழுப்பரையரின் மகளுமான “கிழானடிகள்” என்பவள் “வன்னிய குல க்ஷத்ரிய” சமூகத்தைச் சேர்ந்தவள் ஆவாள். இன்றைய “விழுப்புரம் மாவட்டம்” என்பது சோழர்கள் காலத்தில் “விழுப்பரையர்கள்” என்னும் சிற்றரசர்களால் ஆளப்பட்டது. இவர்கள் “விழுப்பாதிராசன்” என்றும் சோழர்கள் காலத்துக் கல்வெட்டில் அழைக்கப்பெற்றனர் :-
“குடிப்பள்ளி குமாரி சேந்தனான ஜயங்கொண்ட சோழ விழுப்பரைய நாடாழ்வான்” (S.I.I. Vol-XVII, No.227), (Adhirajendra Chola, 1068-69 A.D).
“குடிப்பள்ளி சேந்தன் நாகனான ராஜேந்திரசோழ விழுப்பாதிராசன்” (S.I.I. Vol-XVII, No.223), (Kulottunga Chola-I, 1096-97 A.D).
“விழுப்பரையர்” என்ற பெயரானது “போரில் பல விழுப்புண் பெற்ற வீர மரபினர்களுக்கு”வழங்கப்படும் வீரமிகு பட்டமாகும். விழுப்புண் பெற்ற அரையர்கள் “விழுப்பரையர்கள்” எனப்பட்டனர். அத்தகைய “வீர மரபினர்கள்” இன்றும் “விழுப்புரம் மாவட்டத்தில்” நிறைந்து பெருமையோடு வாழ்ந்துவருகிறார்கள்.
—– xx —– xx —– xx —–

Kodumbalur Velir

The “Kodumbalur Irrukku Velir”, who ruled the province called “Ko Nadu” were referred as “Velan” (வேளான்) in chola inscriptions. Being “Kshatriyas”, they had their matrimonial affairs with imperial cholas and other “Kshatriya” clans. One of the “Tirumalpur Inscription” says :-
“கோ நாட்டுக் கொடும்பாளூர் வீரசோழ இளங்கோ வேளான் மகன் ஆதிச்சபிடாரன் என்பவன் கோவிந்தபாடியில்இருந்த மடம் ஒன்றுக்கு கொடைகள் கொடுத்திருக்கிறான்” (A.R.E. No.306 of 1906).
க்ஷத்ரிய சிங்க மூவேந்த வேளாரும், (A.R.E. 1916 Intro P.119)
Appended below is the “velir” (Kshatriya) inscription, which categorically says “Velar” (வேளார்) :-
“ஸ்ரீ இரண சிங்கத் துவராபதி வேளார் படை நாயகன் காரிசாத்தன் உடும்பகுடி நிரைகொள்ள பின்பு எறிந்துபட்டான் பள்ளி வேளாசாரிகள் சிய்…….”
It records the death of “Palli Velasarikal” while the herds have been plundered at vudumba-kudi by Karisattan, the commander of the army of “Iranasinga Tuvarapathi Velar”
(Select Inscriptions of Tamil Nadu, Serial No : V : 1A, Page 130 & 131), (Department of Archaeology, Govt of Tamil Nadu), (Dindugal, Natham, Ulupakudi, 8th Century A.D).

சமஸ்கிருத கல்வெட்டு குறிப்பிடும் அக்னி குல வன்னியர்

மராட்டிய மாநிலத்தில் (Hottal village, Nanded District) உள்ள கி.பி. 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமஸ்கிருத கல்வெட்டில், அக்னி வம்ச க்ஷத்ரியர்களைப்பற்றிய பல குறிப்புகள் உள்ளன. அகத்திய முனிவரின் அக்னி குண்டத்தில் இருந்து “அக்னி புத்திரர்கள்” தோன்றினார்கள் என்று குறிப்பிடுகிறது. மேலும் அக் கல்வெட்டு கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:-
“Vamso vairi-pratap-anala-kula-meghahvahner vamsam” (Slogam 10 – 11).
(அனல் குலத்தில் இருந்து வன்னியர் வம்சம் உற்பவித்து)
“Praty-agam tasya kshatriya-pumgavasya yasasa trailokyam” (Slogam 21)
(வன்னிய அரசர்களை க்ஷத்ரியர்கள் என்று ஸ்லோகம் 21 மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது)
எனவே மேற்குறிப்பிட்டகல்வெட்டு சான்றின் அடிப்படையில் வன்னியர்கள் “க்ஷத்ரியர்கள்”என்பது முற்றிலும் உண்மையாகிறது.
மேலும் அகத்திய முனிவரைப் பற்றி தமிழ்க்கூறும் நல்லுலகம் மிக நன்றாக அறிந்திருக்கிறது. புறநானூறுப் பாடலில் சங்கத் தமிழ் புலவர் கபிலர் அவர்கள் “வடபால் தவமுனிவனின் அக்னி குண்டத்தில் இருந்து வேளிர்கள் தோன்றினார்கள்” என்று குறிப்பிடுகிறார்கள்.
தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள், வடபால் முனிவன் என்பவர் “சம்பு மாமுனிவன்” என்பவரே ஆவார் என்று சான்றுகளை மேற்கோள் காட்டி குறிப்பிடுகிறார்கள்.
திருமூலரின் திருமந்திரத்தில், “வடபால் முனிவன் என்பவர் அகத்தியன்” என்பதை கீழ்கண்ட பாடல்-338 நமக்கு உணர்த்துகிறது :-
“அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடும்
அங்கி உதயஞ்செய் வடபால் தவமுனி
எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே”
எனவே, வடபால் தவமுனிவன் என்பவர் “சம்புமா முனிவன் என்கிற அகத்தியர்” ஆவார்கள்.
நச்சினார்க்கினியர், “அகத்தியனார்……..துவராபதிப்போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையுங் கொண்டு போந்து காடு கெடுத்து நாடாக்கி” எனத் தொல்காப்பியப் பாயிரயுரையிலும்”மலையமாதவன் நிலங்கடந்த நெருமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைச் குடிப்பிறந்த வேளிர்க்கும்” என அகத்திணையியல் 32 ஆம் நூற்பாவுரையிலும் கூறியுள்ளார்.
எனவே, வன்னியர்கள் “அக்னியில் தோன்றிய ராஜ குல வம்சத்து வேளிர்கள்” ஆவார்கள் என்பது உண்மையாகிறது.

The inscription of Chalukya Somesvara-II (1068-76) is among the earliest and is about the Ashrama of Agastya Rishi on the bank of Vanjara river, he said. The inscription tells us about the rising of Chalukya family and gives geneology of King Dhor, his sons Uttama, Kalichor and Arga, all belonging to the Vanhi Kula, he said.

Archaeologists restore 11th century temples at Hottal

—— xx —– xx —– xx —–